Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டோரின் வசிப்பிடங்களை துப்புரவு செய்வதற்கும் செப்பனிடுவதற்குமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'இளைஞர் காங்கிரஸ்' அனர்த்த முகாமை தொண்டர் அணியினர் கிழக்கு மாகாணத்திலிருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கொழும்பை நோக்கி வந்த வண்ணமுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவினர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் திங்கட்கிழமை (23) இரவு நடைபெற்றது.
இதன்போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள வீடுகளை கழுவிச் சுத்தப்படுத்துதல், தேவையான வீடுகளை செப்பனிடல் அல்லது மீள்நிர்மாணம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இதற்காக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் அணியினருடன், கட்டடத் தொழிலாளர்கள் (மேசன்மார்கள்), தச்சர்கள், மின்சார வேலையாட்கள், குழாய் திருத்துவோர் போன்றோரை உள்ளடக்கிய குழுவினர் இன்று புதன்கிழமையிலிருந்து களத்தில் இறங்கிப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இக்கலந்துரையாடலில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிசாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
53 minute ago
1 hours ago