2025 மே 05, திங்கட்கிழமை

‘சகோதரர்களாலேயே மஹிந்த தோற்றார்’

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தெரியாத சகோதரர்களாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போனதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனார்தன தெரிவித்தார்.

களுத்துறை, அளுத்கம தர்கா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வான்றில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரபல்யம் அடைவதன் மூலம் ஆட்சியை நடத்த அவர்கள் முயற்சித்ததாகவும் இறுதியில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கட்சி பேதமின்றி சகல வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், அரசு முன்னெடுக்கும் வெற்றிக்கரமான வேலைத்திட்டங்களுக்கு எதிர்கட்சி எதிர்ப்பது அரசியலில் சகஜமான ஒன்றெனவும் குறிப்பிட்டார்.

எனினும், இன்று இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றுவதால் விமர்சனங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியில் இருந்தால் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது போல, எதிர்கட்சியில் இருந்தால் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க மாத்திரமே முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய அரசு சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணி வருவதாகவும் இதனால் தான் அனர்த்தங்களுக்கான நிவாரணங்கள் உலகநாடுகளில் இருந்த அதிகளவு கிடைத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X