Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் மீன்பிடித்த 8 மீனவர்களுக்கு கம்பஹா மாவட்ட கடற்றொழில் காரியாலய அதிகாரிகள் பிணை வழங்கியுள்ளார்களெனவும் இம் மீவர்களி்டமிருந்து இரண்டு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட கடற்றொழில் காரியாலய உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு, பலகத்துறைக் கடற்பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30க்கு, குறித்த மீனவர்களை, கடற்படையினருடன் இணைந்து கடற்றொழில் பரிசோதகர்கள் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட முறையில் மீன் பிடித்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த முறையில் மீன்பிடித்தலின் போது வளையில் அதிக எண்ணிக்கையான மீன்கள் ஒரே தடைவையில் அகப்படுவதாகவும் இதன் காரணமாக மீன் உற்பத்தியில் பாதிப்பு எற்படுவதுடன், ஏனைய மீனவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இம்மீனவர்களுக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்களை மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட கடற்றொழில் காரியாலய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
1 hours ago