Gavitha / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள சுயதொழில் சந்தைத் தொகுதியை அப்பகுதியிலிருந்து நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம், தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலையீட்டினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியால் செல்லும் கால்வாய்கள் புனரமைப்புச் செய்யும் நிமித்தம், குறித்த சந்தைத் தொகுதி அப்புறப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் வி.கே.ஏ. அநுர தெரிவித்ததுடன், அதற்கான தீர்மானத்தையும் எடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த சந்தைத் தொகுதியை நீக்குவதற்கு கொழும்பு மாநகர சபை எடுத்த தீர்மானமானத்துக்கு, அங்கிருந்த வியாபாரிகள் கடும் எதிர்ப்பை வௌியிட்டனர்.
இதையடுத்து, அமைச்சர் பைசர் முஸ்தபா, இது குறித்து, கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமையவே, குறித்த சுயதொழில் சந்தைத் தொகுதியை அப்பகுதியிலிருந்து நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம், தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
29 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago