2025 மே 01, வியாழக்கிழமை

சார்ஜர்கள், பெட்டரிகளுடன் கைதி கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு மின்கலங்கள் மற்றும் இரண்டு பேட்டரி சார்ஜர்கள்  ஆகியவற்றை வெலிக்கடை விளக்கமறியலில் வைக்க முற்பட்ட கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதிகளை சோதனையிட்ட போது கால்சட்டைப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவராவார்.

விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி டி.ஐ.ஜி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலை முகாமின் பொலிஸ் சார்ஜன்ட் 6083 விக்கிரமசிங்க சந்தேக நபர்களை கைது செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .