Princiya Dixci / 2017 மே 20 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, கொப்பரா சந்தியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் என்பவற்றை இறைவரி திணைக்கள அதிகாரிகள், நேற்றுக் (19) கைப்பற்றியதோடு, இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
கம்பஹா மாவட்ட உதவி இறைவரி திணைக்கள ஆணையாளர் ஆர்.எம். ரத்நாயக்கவுக்குக் கிடைத்த தகவலையடுத்து தலைமையிலான கம்பஹா மற்றும் ஜா-எல இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர் குழுவினர், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது 268 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 5,400 வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
அத்துடன், குறித்த சுப்பர் மார்க்கெட்டின் உரிமையாளரும் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



22 minute ago
37 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
40 minute ago