2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

செயலமர்வும் கலந்துரையாடலும்

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழு நடத்தும் 'தமிழ்க் கல்வியின் இன்றைய நிலையும் எதிர்நோக்கும் தேவைகளும்' என்ற தலைப்பிலான இருநாள் செயலமர்வும் கலந்துரையாடலும், கொழும்பு - 04, சரஸ்வதி மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமையும் (07) ஞாயிற்றுக்கிழமையும் (08) காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X