Gavitha / 2016 மார்ச் 09 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுநீரக நோய் தொடர்பான அறிக்கையைத் தனக்கு உடனடியாக சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம், தேசிய குருதி மாற்றுகை மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (07) நடைபெற்றது.
இதன்போது, ஒரு வருடத்தில் இலங்கையில் 5,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு, விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்குப் பிரதான காரணங்களாகும் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
'குறித்த அறிக்கையை ஜேர்மனி உள்ளிட்ட சிறுநீரக நோய் தவிர்ப்பு தொடர்பில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளிடம் உடனடியாகச் சமர்ப்பித்து அந்நாடுகளின் உதவியுடன் குறித்த கருத்திட்டத்தை விரைவில் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றார்.
மேலும், உணவு வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் சீனியின் அளவைக் குறைப்பதற்கும் அரசாங்கம் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதோடு, சிற்றுண்டிச்சாலைகளில் தேநீர் கோப்பையில் சீனியைச் சேர்க்காது தேவையான அளவில் பயன்படுத்திக்கொள்வதற்கு ஒரு சீனி பக்கெட் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததோடு, அதன் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, எயிட்ஸ் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, தற்போது வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களில் வட மாகாணத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
3 minute ago
5 minute ago
58 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
58 minute ago
4 hours ago