2025 மே 07, புதன்கிழமை

டெங்கு சுற்றிவளைப்பில் 265பேருக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகின்றமையினால் மேல் மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சுமார் 426 குழுக்கள் கலந்துக் கொண்டுள்ளதுடன் முதல் நாள் சுற்றிவளைப்பின் போது டெங்கு நோய் பரவியுள்ள 1,354 பகுதிகள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 442 பேருக்கு எதிராக கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் மேலும் 102 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகரகள் தெரிவித்தனர்.

இரண்டாவது நாள் சுற்றிவளைப்பின் போது 163 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X