Princiya Dixci / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கியூ.ஸியின் 40ஆவது நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’, அவரின் நினைவு நாளான புதன்கிழமை (26) மாலை 5.30க்கு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சுகாதாரம், போஷாக்கு, சுதேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago