Editorial / 2017 ஜூலை 04 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக, நீர்கொழும்பு நகரில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக, நகரில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இட வசதியின்மை காரணமாகவே, நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வசதியுள்ள பலர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில், பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து வருகின்றனர்.
நீரகொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்ற டெங்கு நோயாளியை, ஒரு தடைவை பார்வையிடுவதற்கு நிபுணத்துவ வைத்தியர்கள், 2 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அறவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் 1084 டெங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் முதல் ஐந்தரை மாத காலப் பகுதியில் 3,790 டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago