2025 மே 03, சனிக்கிழமை

தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பஸ் சாரதி

S. Shivany   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிடும் என்ற அச்சத்தில்,  மத்துகமையிலிருந்து களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலைக்கு, வைத்தியசாலை  ஊழியர்களை ஏற்றிச் செல்லும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்  சாரதி, இன்று (8)  அதிகாலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அகலவத்தை- யட்டியன, கொடஉடஹேன பகுதியைச் சேர்ந்த 56 வயதுடை இரண்டு பிள்ளைகளின் தந்தையே,  இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 
பஸ்ஸில் பயணித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக, உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், மத்துகமை பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்தை தலைமையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X