Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 21 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திரனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.
இந்த கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக, இந்த யுவதியுடன் அவருடைய தாய், இரண்டு வருடங்களாக அந்த கான்ஸ்டபிளின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், தாயையும் மகளையும் அறையொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் பொலிஸ் கான்ஸ்டபிள் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அந்த யுவதியை கடுமையாக தாக்கிய கான்ஸ்டபிள், தாயின் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இதுதொடர்பில், கொஸ்கம பொலிஸ் நிலையத்தில், வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர், கொஸ்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திரனாளியான 26 வயதான யுவதியை, வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்கம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
51 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago