2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி சூடு: வர்த்தகர் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

தன்னிடமிருந்த துப்பாக்கியினால் குழுவொன்றின் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட வர்த்தகர் ஒருவரை, சீதுவை பொலிஸார் இன்று (03) கைதுகைதுசெய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து, இங்கு அவற்றைப் பொருத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றின் உரிமையாளரான ஹரச பிரபாத் த சில்வா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் வாகனங்களை பொருத்தும் நிலையம் மினுவாங்கொடை  பிரதேசத்தில் அமைந்துள்ளது. விற்பனை நிலையம் சீதுவை - லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளது.

2012ஆம் ஆண்டின் பின்னர், சீதுவை - லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தில் வாகனங்களை கொள்வனவு செய்த நபர்கள் அந்த வாகனங்கள் இதுவரை பதிவு செய்து கொடுக்கப்படாமை  தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தருவதாக, விற்பனை நிலைய உரிமையாளருக்கு அறிவித்துவிட்டு வந்துள்ளனர்.

இதன்போது, உரிமையாளருடன்  பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோபமடைந்த வாகன விற்பனை நிலைய உரிமையாளர் தன்னிடமிருந்த துப்பாக்கியினால்  அவர்களை சுடமுயன்றுள்ளார்.

அதனை பறிப்பதற்கு ஒருவர் முயன்றபோது, துப்பாக்கி இயங்கியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை செய்த பொலிஸார், குறித்த வர்த்தகரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் விற்பனை செய்துள்ள பல வாகனங்கள், பதிவு செய்யப்படாமல் விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X