Niroshini / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தை நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார்.
அறிவை மையமாக கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை மீள்நிர்மாணிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்தொழில்நுட்ப பீடம் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் இப்பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை, பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.
அதன் பின்னர் நினைவுபடிகத்தை திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப பீடத்தை மாணவர்களிடம் கையளித்தார்.
இதேவேளை, கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடத்துறையில் காலி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மல்ஹரஸூலியா மத்திய கல்லூரி மாணவி எம்.என்.பாரா நிபிலா ஜனாதிபதியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நானாயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் மனுஷ நானாயக்கார, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர, கல்லூரி அதிபர் ஐ.எம்.எம். யூசுப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், காலி டெல்பட் டவுன் நடைபாதை வியாபாரிகளுக்காக 10.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய அளவிலான முயற்சியான்மை வியாபாரத் தொகுதியும் நேற்று (08) முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 28.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தடல்ல பியதிகம வாராந்த சந்தையை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago