Editorial / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

“கடந்த காலங்களில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களை 2020ஆம் ஆண்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன், 2025ஆம் ஆண்டளவில் கடன் தொல்லையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் அபிவிருத்திக்கான வியாபாரக் கொடிகள் அணியும் நிகழ்வு, அலரி மாளிகையில், நேற்று (02) நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இளைஞர் கொடிதினத்தை நினைவு கூரும் நிகழ்வு, 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாங்கள், இந்தக் கொடிதினத்தை வெற்றிகரமான முறையில் கொண்டாடினோம். இதன் வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொண்டோம். இதேபோல இந்த ஆண்டும் மக்கள் எங்களுக்கு இதை வெற்றிக்கரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவுவார்கள் என நினைக்கின்றேன். மக்களால் அர்ப்பணிப்புடன் வழங்கப்படும் இந்தப் பணத்தை மட்டுமன்றி, நாங்களும் இதற்காக அதிகமாக நிதியை ஒதுக்குவோம்.
“பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியிடப்படும் நூல்களுக்காக, நூறு மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
“ஊருக்கு ஒரு கோடி என்ற அபிவிருத்தி வேலைத் திட்டத்தையும் நாங்கள் விரைவில் ஆரம்பிப்போம். இவைகளை நாம் ஏன் செய்கின்றோம் என்றால், எதிர்காலப் பொறுப்புகளை பொறுப்பேற்கக் கூடிய வகையில் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்த வேண்டும்” என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago