Editorial / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
வீடொன்றில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த விலையுயர்ந்த நாய் ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட கணவன் - மனைவி இருவரும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரையும் தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் கொண்ட இரு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்றுமாறு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.ஜி.என்.கே. ரன்கொத்கே உத்தரவிட்டார்.
கடுவலை, கிரிபட்டிய வீதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
கடந்த 13ஆம் திகதி, கொச்சிக்கடை பிரதேசத்தில் சிலாபம் - கொழும்பு வீதியில் வைத்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாயை, பிணையில் விடுதலை செய்யப்பட்ட தம்பதியினர், முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது அங்கு நின்ற பிரதேசவாசி ஒருவர், அந்த நாய் தமக்கு தெரிந்த ஒருவருடையது எனவும் நாயை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அவர்களிடம் கூறியுள்ளார்.
எனினும், அந்த தம்பதியினர் பலாத்காரமாக நாயை, முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர் என நாயின் உரிமையாளர், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து விசாரணை செய்த பொலிஸார், சந்தேகநபர்களான கணவன் - மனைவி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்த போதே, நாயைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை விசாரணை முடியும் வரையில் நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்குமாறும் சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்யவும் நீதவான் உத்தரவிட்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago