Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
களுத்துறை-அகலவத்தை மிஹிந்து வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலையான, தாபிலிகொடை கனிஷ்ட வித்தியாலயம் நேற்று (02) பெய்த கன மழையையடுத்து, நீரில் மூழ்கியுள்ளது.
இதனையடுத்து, பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் கீழ், “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்படாத மேற்படி பாடசாலை, மழைக் காலங்களில் நுழைவாயில் முதல், மைதானத்தில் இருந்து வகுப்பறைகள் மற்றும் மலசலகூடம் வரை, மழைநீர் நிரம்பி வழிவதால் மாணவ மாணவிகள் அன்றாட கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாது பெரும் அசௌகரியங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

31 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago