Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இன்று(17) முதல் மேலும் மூன்று தினங்கள், பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நாட்டின் பிரதான நகரங்கள் செறிச்சோடி காணப்பட்டன.
பெரும்பாலான இடங்களில் வீதிகளில் சன நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டதுடன், வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தபோதும் பொருள்களை வாங்குவதற்கு பொது மக்கள் வருகைதரவில்லை என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் நேற்று (16)கொரோனா கிருமி ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்கொழும்பு மாநகர சபை, தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன், கிருமி ஒழிப்பு பணிகளை முன்னெடுத்திருந்தது.
கொரோனா அச்சம் காரணமான, மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லாததால், உணவக உரிமையாளர்கள், பொதுச் சந்தை வியாபாரிகள், வீதியோர வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025