Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 25 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலதிக பிரிவொன்றை மக்கள் விடுதலை முன்னணியின் சிவப்பு நட்சத்திர நிவாரண சேவைப் பிரிவினர் (ரத்து தருவ சஹன சேவா பலகாய) நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.
இதனை கையளிக்கும் நிகழ்வு, நேற்று (24) மாலை வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசிங்க விசேட பிரிவை திறந்து வைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மகிந்த ஜயசிங்கவின் மேற்பார்வையில், இந்த விசேட பிரிவு, கடந்த இரண்டு வார காலமாக கட்சி உறுப்பினர்கள் சிலரின் சுய உழைப்புடன் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவு அமைக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலும் இடவசதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago