2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நாட்டை திருத்தத் தெரிந்தவர்களுக்கு கடனை அடைக்க முடியாதா?

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  பாநூ கார்த்திகேசு 

'ராஜபக்ஷவின் ஆட்சியை மாற்றி நாட்டைத் திருத்துவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு, மஹிந்தவின் காலத்தில் பெற்றுக்கொண்ட கடனை ஏன் அடைக்க முடியாதா?' என்று மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியது.

'ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் கடனில் இயங்கிக்கொண்டிருப்பதால், அதனைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸை நடத்த முடியாதவர்களால், நாட்டை எப்படி முன் கொண்டு செல்ல முடியும்' என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மே தினக் கொண்டாட்டங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம், தெஹிவளையில் அமைந்துள்ள பீ.ஆர்.சீ மைதானத்தில் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

'கடந்த அரசாங்கம் இவ்வளவு கடன்களைப் பெற்றுள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷவை திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், பொதுமக்களின் முதுகில் சுமையை இறக்கியுள்ளது. நூற்றுக்கு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏன் என்று வினவினால் 'நோய் வந்தால், மருந்து குடிக்க வேண்டுமே' என்று கூறுகின்றார்கள். ஆனால், இந்த மருந்தின் மூலம் கசப்பான அனுபவங்களையே மக்கள் பெறுகின்றனர்' என்று அவர் கூறினார்.

'கடந்த 68 வருட காலமாக, நாட்டை இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும், மக்களுடைய முதுகிலுள்ள கடன் சுமை இன்னும் இறக்கி வைக்கப்படவில்லை. இன்று, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 5 இலட்சம் ரூபாய் கடனாளியாகவே இருக்கின்றான்' என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X