Princiya Dixci / 2017 மே 07 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
கடந்த நான்கு மாத காலத்தில், நீர்கொழும்பில் 536 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஜனவரி மாதத்தில் 144 பேரும், பெப்ரவரி மாதத்தில் 47 பேரும், மார்ச் மாதத்தில் 134 பேரும், ஏப்ரல் மாதத்தில் 211 பேரும் டெங்குக் காய்யச்சலினால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தளுபத்தை பிரதேசத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு மாதக் காலப்பகுதியில் தளுபத்தை பிதேசத்தில் மத்திரம் 111 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட நோயாளிகள் தவிர்ந்து, பல்வேறு பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகள், இங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் டெங்குக் காய்யச்சலினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றார்.
இதேவேளை, வைத்தியசாலையின் ஆறு மாடிக் கட்டடம், கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றமையினால், இடவசதியின்மை காரணமாக சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள் ஆகியோர், பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
26 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago