2025 நவம்பர் 19, புதன்கிழமை

நீரில் மூழ்கி மாணவர் பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு,  கொச்சிக்கடைக் கடற்பகுதியில் நீராடச் சென்ற மாணவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, நேற்று (05) மதியம் பலியாகியுள்ளாரென, கொச்சிக்கடைப் ​பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் நீராடுவதற்காக, நான்கு மாணவர்கள் சென்ற நிலையில் குறித்த மாணவர் பலியாகியுள்ளார்.

கட்டானை கோட்டத்தைச் சேர்ந்த ஏத்கால பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்களப் பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயதுடைய நிபுன் ரொஸான் பெர்ணான்டோ புள்ளே என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

 சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X