Yuganthini / 2017 ஜூன் 15 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு, தன்னார்வ பொலிஸ் கான்ஸ்டபிள்களைத் தெரிந்தெடுப்பதற்கான எழுத்துமூலப் பரீட்சை, எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விவேகானந்தா மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு 12, ஹமீட் அல் ஹுஸைன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களில், காலை 9 மணிமுதல் 11 மணிவரை, இந்தப் பரீட்சை இடம்பெற ஏற்பாடாகியுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு முதல்நாள் வரையில் அவ்வனுமதிப் பத்திரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள், 011-2430362 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், தலைமையகம் தெரிவித்தது.
33 minute ago
38 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
50 minute ago
53 minute ago