2025 மே 05, திங்கட்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிக்கினர்

Editorial   / 2017 மே 31 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், களுத்துறை, கனேமுல்ல - கடவல வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், போலி நாணயத்தாள்களை மாற்றச்சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நிலையமொன்று, ராகமப் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மேலுமொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்துடன், குறித்த பெண்ணிடம் இருந்து 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 25ஐக் கைப்பற்றிய பொலிஸார், போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நிலையத்திலிருந்தும் ஐம்பதாயிரம் ரூபாய் நாணத்தாள்களுடன், அவற்றை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், 22 மற்றும் 29 வயதுடையவர்கள் என்றும் புகைப்பட நிலையம் என்ற போர்வையிலேயே, மேற்படி போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது விடயமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X