2025 நவம்பர் 19, புதன்கிழமை

பெண் உட்பட ஐவருக்கு மறியல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் கொள்ளையிட்ட சீதுவை மூக்கலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த  பெண் உட்பட ஐவரை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச  உத்தரவிட்டார்.

குறித்த பெண்  நவநாகரீகமாக ஆடை அணிந்து கொண்டு இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் தனியாக பயணிக்கும் ஆண்களிடம் சீதுவை பிரதேசத்துக்கு கொண்டு சென்று இறக்கிவிடுமாறு வேண்டுகோள் விடுப்பார்.

அதன்பின்னர், குறித்த இடத்துக்கு சென்றதும் அங்கு இருக்கும் இளைஞர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த நபரை தாக்கிவிட்டு பணம், செல்லிடத் தொலைபேசி மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக சீதுவ பொலிஸா தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X