2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பெண் வன்புணர்வு; ஒருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

 22 வயதுடைய குடும்பப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளரை,  எதிர்வரும் 7ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிரவெலிவத்த நேற்று (3) உத்தரவிட்டார்.

கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஜி.தீப்தி ரொபின்சன் (43 வயது) என்பவரே தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

சந்தேகநபரை, கொச்சிக்கடை பொலிஸார் கைதுசெய்து, மன்றில் ஆஜர் செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதவான், சந்தேகநபரைத் தொடரந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கொச்சிக்கடை பிரதேசத்திலுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான வீடொன்றைப் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண்ணின் குடும்பத்துக்கு சந்தேகநபர் வாடகைக்குக் கொடுத்துள்ளார். பெண்ணின் கணவர், மேசன் தொழில் செய்பவராவார்

சம்பவம் இடம்பெற்ற  கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் சந்தேகநபர், அவ்வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது  பாதிக்கப்பட்ட பெண்ணும்  அவரது குழந்தையும் வீட்டில் இருந்துள்ளனர்.

சந்தேகநபர், ஒரு குழந்தையின் தாயாரான அப்பெண்ணை அச்சுறுத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளாரெனவும்  சம்பவம் இடம்பெற்றவேளை, பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியில் சென்றுள்ளார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சந்தேகநபர், வென்னப்புவ பிரதேசத்திலுள்ள ஓட்டுத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X