Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மே 21 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட எமது சகோதர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி அலுவலகத்தினதும் அதன் நிர்வாகத்துக்குட்பட்ட நிறுவனங்களினதும் பணிக்குழாத்தினர் தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக வெசாக் வைபத்திற்காக ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகத்துக்குட்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்த வெசாக் பக்தி பாடல் நிகழ்ச்சி, அன்னதானம் (தன்சல்) வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பணிக்குழாத்தினரின் நன்கொடைகள் ஆகியன பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியினைக்கொண்டு நிதியம் ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதுடன், அகதிகளாக உள்ளவர்களின் தற்போதைய தேவைகள், வெள்ள நீர் வற்றிய பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்ற பின் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை துப்பரவேற்பாட்டு வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் ஏனைய போசாக்கு மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு இந்நிதியம் பயன்படுத்தப்பட உள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அகதிகளாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ள எமது சகோதர மக்களுக்கான உலர் உணவு, உடைகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி அலுவலக பணிக்குழாத்தினர் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், அது தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ் அனர்த்த நிலைமைகளின் கீழ் அரசு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், முப்படைகள் மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி உள்ளிட்ட ஏனைய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வர்த்தக சமூகம், விசேடமாக வெகுசன ஊடகம் ஆகியன இணைந்து அவசர நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை தடையின்றி நடைமுறைப்படுத்துவதுடன், ஏதேனும் ஒரு காரணத்தினால், பாதிக்கப்பட்ட பிரதேசம் அல்லது மக்கள் மீது இதுவரை கவனம் செலுத்தப்படாது இருப்பின் அல்லது வழங்கப்படும் நிவாரணங்கள் போதியதாக இல்லாதிருப்பின் எந்தவொரு தொலைபேசி மூலமும் 1919 இலக்கத்தைத் தொடர்புகொண்டு அதுபற்றி அறியத் தருமாறு ஜனாதிபதி அலுவலகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago