2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்டோரை கவனித்து வருவதற்கு நன்றி

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச  குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும் அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும் கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தொடர்ந்தும் பணிபுரியக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பிரதேச பள்ளிகளின் உலமாக்கள், நிர்வாகிகளுடனான நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளனத்தின் பணிகளில் தாமும் ஈடுபாடுகாட்டி, பணிகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியை  ஆரம்பித்துள்ளேன்.

நிவாரணம் பெறவரும் மக்களை மனதளவிலேனும் நோகடிப்பதை தவிர்க்க வேண்டும். அன்பான வார்த்தைகளால் இன்முகத்துடன் உதவிகளை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் திடமான மனநிலையை வழங்கி, அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்வைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை வழங்க வேண்டும் என்பதே இன்று அனைவரினதும் பிரார்த்தனையுமாகும். இந்தப் பணிகளில் உதவும் அத்தனை பேருக்கும் இறைவன் நற்கூலியை வழங்க வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X