Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.காதிர் கான்
அண்மையில் ஏற்பட்ட அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் விசேட பணிப்புரையின் பேரில் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கொலன்னாவை, வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்லை, கொட்டிகாவத்தை, கொத்தட்டுவை ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள், பாடசாலை சிறார்களுக்குத் தேவையான அப்பியாசப் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொலன்னாவை, வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்லை, கொட்டிகாவத்தை, கொத்தட்டுவை ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (23) நேரில் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள நிலைமைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை துரிதமாக உரிய முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அதிகாரிகளை இவ்விஜயத்தின்போது அமைச்சர் பணித்தார்.
இதேவேளை, கடந்த நாட்களில் வெளிநாடு சென்றிருந்ததன் காரணமாக, அனர்த்தம் ஏற்பட்ட காலப் பகுதிக்குள் இப்பிரதேசங்களுக்கு உரிய நேரத்தில் சமுகமளிக்க முடியாமல் போனதையிட்டும் அமைச்சர் தனது வருத்தத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்துக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
46 minute ago
59 minute ago