Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், கைகளை கழுவுவதற்கு ஏற்ற வகையில், வர்த்தகர் ஒருவர் தன்னார்வத்துடன் முன்வந்து அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அளுத்கம நகரைச் சேர்ந்த காமினி பெரேரா என்ற வர்த்தகர், தனது சொந்த நிதியில், நீர்த்தாங்கியை கொள்வனவு செய்து அதன் மூலம் குழாய் பொருத்தி மக்கள் கைகளை கழுவி, கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற வழிவகை செய்துள்ளார்.
இதற்கமைய, அளுத்கம பொது விளையாட்டங்கு, நூலகம், ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு வருகைதரும் பயணிகள் குறித்த குழாயில் கைகளை கழுவிய பின்னர் அங்கிருந்து வெளியியேறி வருகின்றனர்.
ரயில் நிலையங்கள், பஸ் தரிப்பிடங்களில் இத்தகைய வசதி இல்லாத காரணத்தால் பயணிகளின் நன்மைக் கருதி தான் இவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுத்ததாக காமினி பெரேரா தெரிவித்தார்.
காமினி பெரேராவின் மனிதநேயமிக்க இந்தச் சேவையை, அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
1 hours ago