Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மலேசியாவின் பிரபல பெற்றோலிய நிறுவனமான PETRONAS ன் பிரதம நிறைவேற்று அதிகாரி Datuk Wan Zulkifee Wan Ariffin உள்ளிட்ட பிரதிநிதிகளை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
தமது நிறுவனம் இலங்கைக்கு எரிவாயு மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை வழங்கியுள்ள போதிலும் இலங்கையுடன் நீண்டகால திட்டங்கள் இல்லாதிருப்பதனால், இலங்கையுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நோக்குடன் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக Datuk Wan Zulkifee Wan Ariffin இதன்போது தெரிவித்தார்.
உலகின் பிரபலமான நிறுவனங்களின் பட்டியலான “Fortune 500” உள்ளடக்கப்பட்டுள்ள ஒரேயொரு மலேசிய நிறுவனமான PETRONAS தற்போது 30 நாடுகளில் புதிய திட்டங்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது என்பதனால், PETRONAS போன்ற உலக அங்ககிகாரம் பெற்ற நிறுவனமொன்று நாட்டில் முதலீடு செய்தால், அது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
தான் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்த Datuk Wan Zulkifee Wan Ariffin , சுற்றுப்பயணத்தின் போது பெற்றோலிய மற்றும் சக்திவலு அமைச்சர்களையும் சந்தித்து வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் மலேசிய உயர்ஸ்தானிகர் Wan Zaidi Wan Abdullahவும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
48 minute ago
2 hours ago