Niroshini / 2016 மே 17 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மல்வானை ரக்ஸபான பிரதேசத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பாரிய போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால், கொழும்பு பிரதான நகரிலிருந்து கிராமப் புறங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலைமையை நேரில் கண்டறிவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜய வர்த்தனவின் மல்வானைபிரதேச அரசியல் விவகாரங்களுக்கான இணைப்பாளர் எம்.இர்பான் மற்றும் அமைச்சரின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் எம்.தல் ஹாம் ஆகியோரின் விசேட அழைப்பின் பேரில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் குறித்த பிரதேசத்துக்கு வருகை தந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
57 minute ago