2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாக்காரின் நினைவு தினம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

தென் மாகாண ஆளுநர், சபாநாயகர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த தேசமான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்காரின் 20 ஆவது வருட நினைவு தினம்,  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) இடம்பெறவுள்ளது.

இதில், துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹமட் தவ்லொக்லு நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துவதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நீதித்துறை, சமூக சேவைத் துறைகளில் பிரகாசித்த பாக்கிர் மாக்கார், 1949 ஆம் ஆண்டு, பேருவளை நகர சபை அங்கத்தவராக தெரிவானதைத் தொடர்ந்து, அதன் தலைவராக உயர்வு கண்ட அவர், 1960 இல் பேருவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, முதன் முதலாக நாடாளுமன்றம் சென்றார்.

1977இல் மீண்டும் அமோக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற அங்கத்தவரானார். அப்போது பிரதி சபாநாயகராக இருந்து 1978இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் அமைந்த நாடாளுமன்றின் சபாநாயகரானார்.

1983 இல் பல்வேறு காரணங்களால் சபா நாயகர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து, 1988 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியலிலிருந்து விடை பெற்றார்.

தேசமான்ய பாக்கிர் மாக்கார், தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு, மேலும் கௌரவிக்கப்பட்டார்.

இன ஐக்கியம், தேசிய ஒற்றுமை என்பனவற்றுக்காகவும் அர்ப்பணிப்புச் செய்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவராகவும் பாக்கிர் மாக்கார் திகழ்ந்தார்கள்.    

இவரது அரும் பணிகளை, நாட்டுக்கான பங்களிப்புக்களை கௌரவிக்கும் முகமாகவே, இவருக்கு தேசமான்ய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X