Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் காலி மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பாடசாலைகளிலும் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தில் நடைபெறும்.
மேற்படி கல்வி நிலையம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் அதன் தலைவர் நஜீப் ஹாஜயார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
கல்வி நிலையத்தில் இயங்கும் அமீர் ஆலிம் இலவச குர்ஆன் மத்ரஸாவில் புனித குர்ஆனை ஓதி முடித்த சிறார்களுக்கும் இதன் போது சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இவ்விழாவில் கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள் தர்கா நகர் பிரதேச பிரமுகர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
12 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago
22 Dec 2025