Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்துக்குட்பட்ட வீதிகளில், சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு மிகுதிப் பணம் வழங்காவிட்டால், அது தொடர்பில் அறியத்தருமாறு, மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பயணிகள் அசௌகரியங்களுக்குள்ளாகும் விடயங்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறும் போக்குவரத்து அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, சிறந்த சேவையை அவர்களுக்கு வழங்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“சில தனியார் பஸ் நடத்துநர்கள், பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவதில்லை என்றும், பயணச்சீட்டு வழங்கினாலும் சில நடத்துநர்கள் மிகுதி சில்லறைக் காசுகளைச் சரியாக வழங்குவதில்லை என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
“எனவே, இவ்வாறு செயற்படும் தனியார் பஸ் நடத்துநர்கள் தொடர்பிலோ அல்லது தனியார் பஸ்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அது குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அதிகார சபையின் 011 55 59 595 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும்” என்றார்.
மேலும், தனியார் பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளுக்கும் கட்டாயம் பயணச்சீட்டு மற்றும் மிகுதிப் பணம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்டோருக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதற்கான அதிகாரம், அதிகார சபைக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago