2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மினுவாங்கொடையில் மறைந்திருந்த 31 வெளிநாட்டவர்கள் சிக்கினர்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மினுவாங்கொடை,  நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த வெளிநாட்டுப் பிரைஜகள் 31 பேரை, இன்று (02)  கண்டுபிடித்துள்ளதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை, பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திய போது, அங்கு ஒளிந்திருந்த நேபாளம் நாட்டுப் பிரஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவரும் உட்பட 31 பேரைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தும் முகாங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அவ்வீட்டின் உரிமையாளர், வீட்டினுள்ளேயே தனிமைபடுத்தப்பட்டார். 

பிற நாடுகளுக்குத் தொழிலுக்குச் செல்வதற்காக, இலங்கையை இடைத்தாங்கல் நிலையமாக இவர்கள் பாவித்திருந்த போதும் அரச அறிவிப்புக்களை மீறி இவர்கள் மறைந்திருந்மை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X