Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம் முக்தார்
பேருவளை பிரதேச சபைப் பகுதிக்கு உட்பட்ட அளுத்கமை – மதுகமை வீதியில் அளுத்கம வாராந்த சந்தை தொடக்கம் தர்கா நகர் ஞாணிஸர மத்திய கல்லூரி வரையிலான மின்கம்பங்களில் அதிகூடிய வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு பேருவளை பிரதேச சபை எதிர்க்கட்சிப் பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.எம் பதியுத் தீன் பிரதேச சபைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் பிரதேச சபை அலுவலகத்தில் தலைவர் மேனக விமலரத்ன தலைமையில் நடைபெற்றது. சபை ஒத்திவைப்பு வேளையில் அவர் இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
தெற்கு அதிகவேகப் பாதையுடன் இணையும் இந்த வீதிக்கு மூன்று மின்குமிழ்களை உள்ளடக்கிய அதிகூடிய வெளிச்சம் கொண்ட மின்விளக்குகளை மின்கம்பங்களில் பொருத்த சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேரணையை அவர் முன்வைத்ததொடு பிரதேச சபைத் தலைவர் இது குறித்து கவனம் எடுப்பதாக தெரிவித்தார்.
16 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
2 hours ago