Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஆயுதம் தரித்த முக மூடிக் கொள்ளைக் கோஷ்டியினர் நடமாடித் திரிவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருப்பதால், பொது மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மினுவாங்கொடை, ஜா-எல, வெலிசறை, வத்தளை, களனி, கிரிபத்கொடை மற்றும் கம்பஹா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இக் கொள்ளைக் கோஷ்டியினர், பாதைகளில் பயணிப்போரின் உடைமைகளைக் கொள்ளையிட்டு வருவதாக, பொலிஸாருக்குக் கிடைத்துள்ள தகவலையடுத்தே, பொது மக்கள் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கொள்ளைக் கோஷ்டி, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை மடக்கிப் பிடிக்க, கொழும்பு பொலிஸ் தலைமையகம், குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்புப் பொலிஸார் அடங்கிய குழுவினர், தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கம்பஹா மாவட்ட பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago