2025 மே 05, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளில் சுற்றியவர் கைது

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை - ராஜமாவத்தை பிரதேசத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் ​மோட்டார் சைக்கிளில் சுற்றிய நபரொருவரை, மிரிஹென பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மிரிஹான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, அந்த ​வாகனம் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் குறித்த நபர் வைத்திருக்கவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த மோட்டார் சைக்கிள், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரவுநேர விடுதியொன்றில் அறிமுகமான நபரொருவரிடமிருந்து அடமானமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதென, குறித்த சந்தேகநபர், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X