2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாணவனை இலக்கு வைத்த கடத்தல் முயற்சி முறியடிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனை, வான் ஒன்றில் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி, அப் பகுதியில் வீதிப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட இந்தக் கடத்தல் முயற்சியில், அசேல வியக என்ற மாணவனே, காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிவடைந்து, வீடு செல்வதற்காகப் பாடசாலை முன்பாகக் காத்திருந்த குறித்த மாணவனைத் தாக்கி, வானில் கடத்திச் செல்ல முயன்ற மூவரையும், பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாணவன் கடத்தப்படுவதைக் கண்ட, அதே பாடசாலையைச் சேர்ந்த பிறிதொரு மாணவன், துரிதமாகச் செயற்பட்டு, அப் பகுதியில் வீதிப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்தியுள்ளான்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மாணவன் கடத்திச் செல்லப்படும் வாகனத்தை, தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று, மறித்து, மாணவனைக் காப்பாற்றியதோடு, சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X