Niroshini / 2017 ஜனவரி 24 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொட பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில், தரம் 10இல் கல்வி கற்றுவரும் மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தெடர்பில், அப்பாடசாலையின் றக்பி விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் 4 மாணவர்களும் தெமட்டகொட பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
குறித்த மாணவனை, றக்பி விளையாட்டில் கலந்துகொள்ளுமாறு, மேற்படி பயிற்றுவிப்பாளரும் மேலும் 4 மாணவர்களும் வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதியன்று, அம்மாணவனை வகுப்பறை ஒன்றுக்கு அழைத்துச்சென்றுள்ள அவர்கள் ஐந்து பேரும், இரும்பு ராடாக்கள் மற்றும் பொல்லுகளைக் கொண்டுத் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த, தெமட்டகொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago