Kogilavani / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார நுகர்வோர்கள் மின் இணைப்பின் போது செலுத்தும் காப்பு வைப்புப் பணத்துக்கு உரிய வட்டியினை நுகர்வோர்களுக்குச் செலுத்துவதற்கான வழிகாட்டல் ஆவணத்தைத் தயாரித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழிகாட்டல் ஆவணம், இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி தனியார் நிறுவனம் (LECO) ஆகியவங்ஞக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 28ஆம் பிரிவின்படி, மின்னிணைப்புப் பெறும் போது நுகர்வோர் செலுத்திய காப்பு வைப்புப் பணத்துக்கான ஒரு கொடுப்பனவைப் பெறுவதற்கு அந்த நுகர்வோர், உரிமை கொண்டவர் ஆகின்றார்.
இதன்படி, மின் விநியோகம் செய்யும் அமைப்புகள், தம்மிடத்து அந்த வைப்புப் பணத்தை வைத்திருக்கும் காலம் முழுவதும், அந்தக் காப்புப் பணத்துக்கான வட்டியை நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளன. குறித்த வட்டி வீதத்தை வரையறுக்கும் அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வட்டிக்கான தொகை ஆனது ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு அடுத்த ஆண்டும் ஜனவரி மாதத்தில், நுகர்வோர் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையில் கழிக்கப்படும்.
பாரிய அளவில் மின்சாரத்தைப் பெற்று உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கான வட்டித் தொகையானது மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு அடுத்த மாதத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையில் கழித்துக் கொள்ளப்படும்.
மின் இணைப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காப்பு வைப்புப் பணத்தினை திரும்ப வழங்கும் போது, மின் இணைப்பு நிறுத்தும் தினம் வரைக்குமான வட்டியினை வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,“இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, 8.93% இனை, காப்பு வைப்புப் பணத்தின் மீதான, 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த வட்டி வீதம் ஆக அனுமதித்துள்ளது. (மாதாந்த வட்டி வீதம் 0.715% ஆகும்.) இது இவ்வாண்டின் முதல் திகதியில் இருந்து செல்லுபடியாகும்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சராசரி கனத்த நிலையான வைப்பு வீதங்களின் அடிப்படையிலேயே இந்த வட்டி வீதம் அமைந்துள்ளது.
வட்டித்தொகையினை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமிடத்து நுகர்வோர் தங்கள் மின்சார சேவை வழங்குநரிடம் முறைப்பாட்டினை முன்வைக்கலாம்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026