Yuganthini / 2017 ஜூன் 15 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் , இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு, கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், அனைத்துப் பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு, சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரியின் வளர்ச்சி தொடர்பில், பழைய மாணவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலத்தில் ஆற்றிய பணிகளை மீளாய்வுச் செய்வதற்கும், புதிய ஆட்சிக்குழுவைத் தெரிவு செய்வதற்குமான வருடாந்தப் பொதுக்கூட்டமாகவே , இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் புகழ் பூத்த பழம்பெரும் கல்விக்கூடங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 1890ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் இக்கல்லூரி, 1989ஆம் ஆண்டில், தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
இதனையடுத்து ஆரம்பிக்கப்பட்டு, கொழும்பில் கடந்த பல ஆண்டுகளாகஇயங்கி வரும் யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் மாத்திரமன்றி, அவ்வப்போது கல்வி அமைச்சுடனுடம் ஏனைய நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணம்இந்துக் கல்லூரியின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதிலும் முக்கியமான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago