Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, எதிர்வரும் 3ஆம் திகதி வரை கால அவகாசம் தருகிறோம். அதற்குள் அவர் மன்னிப்பு கோராவிடின், போராட்டம் வெடிக்கும்” என, அரச நிர்வாகச் சேவைகள் சங்கம், எச்சரித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் மேலும் கூறியுள்ளதாவது,
“பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, திவுலப்பிட்டிய பிரதேச செயலகருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தமை குறித்து, அந்த செயலகரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். இதற்காக அவருக்கு, பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை கால அவகாசம் தருகிறோம். இதற்குள் அவர் மன்னிப்பு கோராவிடின், எதிர்வரும் 3 ஆம் திகதியின் பின்னர் நிறைவேற்றுக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும். அநேகமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டதிட்டுள்ளது. ஆகவே, பிரதியமைச்சர் பிடிவாதம் பிடிக்காமல் மன்னிப்பு கோர வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பஹா - திவுலுபிட்டிய துனகஹ பிரதேசத்தில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு செய்ய சென்ற போது, திவுலுபிட்டிய பிரதேச செயலாளர் ஹேரத்துக்கு பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 26ஆம் திகதி தொலைபேசியில் அழைத்து தூற்றியுள்ளார்.
இச்சம்பவ்தை கண்டித்து, திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களை சேர்ந்த அரச பணியாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படும் பட்சத்தில், பிரதேச செயலாளரிடம் தான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக பிரதி ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படும் பட்சத்தில், பிரதேச செயலாளரிடம் தான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக பிரதி ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
7 hours ago