Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷாஜஹான்
நீர்கொழும்பு நீதிமன்றம் முன்பாக ஓகஸ்ட் 31 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள், வழக்கு விசாரணைக்கு வந்திருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பி தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குட்டிதூவ பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் ஒரு மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் துப்பாக்கி சூட்டில் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால், வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரும் காயமடைந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கைத் துப்பாக்கி, ஐந்து ரவைகள், கைக்குண்டு ஒன்றும், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரண்டு செல்லிடத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
ரணில் பிரபாத் ரூப சிங்க என்பவரே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆவார். இவர் மினுவாங்கொட உன்னாருவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
மற்றைய சந்தேக நபர் முத்துவெல கலன் மிதுனுவேவ பிரதேசத்தை சேர்ந்த முத்துநாயக்க கெதர பிரியன்த்த சிசிர குமார என்பவராவார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பிரதான காரணம் காதல் பிரச்சினை மற்றும் போதை பொருள் பிரச்சினை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நாளை (06) நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
12 minute ago
33 minute ago
42 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
42 minute ago
42 minute ago