Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஐ.டி.எச் தேசிய தொற்று நோயியல் நிறுவன வைத்தியசாலை, முல்லேரியாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைகளில், இரவு, பகல் பாராது கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள உள்ளிட்ட சகல அலுவலர்களுக்கும் இலங்கை முஸ்லிம் சமுக அமைப்பு, 1,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை வழங்கி வைத்தது.
உலருணவுப் பொதிகளை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, மருதானையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில், வைத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கை முஸ்லிம் சமுக அமைப்பின் தலைவர் சுரேஸ் ஹாசிம், திட்ட முகாமையாளர் றிஷான் நசீர் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கையளித்தனர்.
அதன் பின்னர் அமைப்பினர் உலருணவுப் பொதிகளை ஐ.டி.எச். தேசிய தொற்று நோயியல் நிறுவன வைத்தியசாலையில் கடமைபுரியும் அலுவலர்களுக்கு வழங்கவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க, பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிந்த சூரியாராச்சிடமும் கையளித்தனர்.
முல்லேரியாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை ஊழியர்களுக்கான பொதிகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன, பிரதிப் பணிப்பாளர் டொக்டர் முதத பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்த நிவாரணப் பொருள்களை வழங்கியதன் மூலம், இலங்கைவாழ் முஸ்லிம் மக்களின் பேரன்பு வெளிப்படுவதாக தெரிவித்தார்.
உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஐ.டி.எச், முல்லேரியா வைத்தியசாலையின் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நோயாளர்களைக் குணப்படுத்துவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள். ஊழியர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்பைக் காண்பித்துள்ளீர்கள் என்று தெரிவித்த அமைச்சர்.
பெறுமதியான இந்தப் பொருள்களை வழங்கியமைக்கு அமைப்பினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
26 minute ago
31 minute ago