2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வைத்தியரின் காரில் மோதி 6 பேர் காயம்

Editorial   / 2022 ஜூன் 15 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருடைய வாகனத்தில் மோதி காயமடைந்த 6 பேர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையை பொலிஸார் தெரிவித்தனர்.

 
படல்கம பொலிஸ் பிரிவில் கொடிகமுவ பாடசாலை அருகில் நேற்று( 14)   கொத்தமல்லி தன்சலவுக்கு கொத்தமல்லி அருந்துவதற்காக சென்றபோதே 6 பேர் இந்த விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சம்பவம் இரவு 7.45  மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
கொடிகமுவ பாடசாலையில் தரம் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயது பாடசாலை மாணவியின் தலையில் ஏற்பட்ட படுகாயத்திற்கு இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
 
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துவிச்சக்கரவண்டியில் கொத்தமல்லி தானசாலைக்கு  சென்று துவிச்சக்கர வண்டிகளை அங்கு நிறுத்திவிட்டு கொத்தமல்லி அருந்த சென்ற போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
படுகாயமடைந்த சிறுமியின் பெற்றோர் குறித்த வைத்தியர் மது அருந்தியதாக தெரிவிக்கின்றனர். எனினும், படல்கமா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .