2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெசாக் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் கைப்பற்றல்

Princiya Dixci   / 2016 மே 17 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கொழும்பு மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் வெசாக் உற்சவ காலத்தில் விநியோகிப்பதற்காகக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்குக் கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள், நேற்று திங்கட்கிழமை (16) கொழும்பு கலால் விசேட பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானம் 45,000 லீட்டர் அடங்கிய 16 கேன்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்ட நவீன ரக வானையும் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரொருவரையும் இதன்போது கைதுசெய்துள்ளதாக கொழும்பு கலால் விசேட பிரிவினர் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் நாளை 18ஆம் திகதி புதன்கிழமை ஆஜர்செய்யவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X