Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான், ரஸீன் ரஸ்மின்
வீட்டொன்றில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் உட்பட பொருட்களைக் கொள்ளையிட்ட, எல்பிட்டிய, பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை, செவ்வாய்கிழமை (11) கைதுசெய்துள்ளதாக, நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
நீர்கொழும்பு, கட்டுவபிட்டி, நுகவெல வீதியிலுள்ள விகாரை முன்பாக, குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டலொன்றின் உரிமையாளரின் தளுபத்தை, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிகளை கொண்ட வீட்டின் மேல் மாடி வழியாக கடந்த 7ஆம் திகதி அதிகாலை வேளை உட்புகுந்து குறித்த சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 4 மணித்தியாலங்கள் தங்கியிருந்த சந்தேகநபர், வீட்டிலிருந்த நகைகள், மாணிக்கக் கற்கள், அவுஸ்திரேலிய கொரல், அலைபேசி மற்றும் கமெரா ஆகியவற்றைத் திருடியுள்ளார்.
சில காலங்களுக்கு முன்னர், சந்தேகநபர், அவ்வீட்டின் கூரைப் புனரமைப்பு வேலைகள் செய்துள்ளார். அதன்மூலம் குறித்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து, கொள்ளையடித்துள்ள சந்தேகநபர், தனது இரண்டாவது மனைவி மூலமாக, நீர்கொழும்பில் அமைந்துள்ள அடகு வைக்கும் நிலையங்களில் நகைகளை அடகு வைத்தமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
37 minute ago